- அண்ணாமலை
- சென்னை
- தமிழ்நாடு காங்கிரஸ்
- ஜனாதிபதி
- செல்வப் பெருந்தகை
- விஸ்வகர்மா
- தமிழ்நாடு அரசு
- தமிழ்
- தமிழ்நாடு
- அண்ணாமலை
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சத்தியமூர்த்திபவனில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: விஸ்வகர்மா திட்டமும் தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள கலைஞர் கைவினைத் திட்டமும் ஒன்று கிடையாது. இதை வைத்து தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை பொய் பிரச்சாரம் செய்கிறார். 18 வயது என்பது அவர்கள் ஆராய்ச்சி படிப்பிற்கு மேல் படிப்பதற்காக செல்லக் கூடாது என்பதுதான். இதுதான் ஒன்றிய அரசின் எண்ணம். ஆனால் தமிழ்நாடு அரசு திட்டத்தில் அப்படி இல்லை. அதேபோன்று இவர்தான் இத்தொழிலை செய்ய வேண்டும் என்றில்லை. யார் வேண்டுமானாலும் எந்த தொழிலை வேண்டுமானாலும் செய்யலாம் என்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது, பீட்டர் அல்போன்ஸ், கோபண்ணா, சொர்னா சேதுராமன், ராம் மோகன், லெனின் பிரசாத், புத்தன் உடன் இருந்தனர்.
* மோடி-அதானி விவகாரத்தை திசை திருப்ப ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தேசிய முற்போக்கு கூட்டணி ஆளும் ஒன்றிய அரசில் அங்கம் வகிக்கும் மாநில கட்சிகளான பீகார் அரசு, ஆந்திரா அரசு போன்றவை ஒரே நாடு, ஒரே தேர்தல் என்னும் மசோதாவுக்கு ஒத்துழைப்பு வழங்குமா என்பது மிகப்பெரிய சந்தேகம். மேலும், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மகாராஷ்டிரா அரசு ஏற்றுக் கொள்ளுமா?. நாடாளுமன்றத்தில் மோடி – அதானி (மோடானி) விவகாரத்தில் ஜனநாயக வழியில் எதிர்க்கட்சிகள் தங்கள் எதிர்ப்பை எழுப்பி வரும் நிலையில் அதனை மடை மாற்றுவதற்கு இந்த மசோதாவை பாசிச பாஜ கையில் எடுத்துள்ளதோ என்று யூகிக்க தோன்றுகிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post கலைஞர் கைவினை திட்டம் குறித்து பொய் பிரசாரம் செய்யும் அண்ணாமலைக்கு கண்டனம் : செல்வப்பெருந்தகை பேட்டி appeared first on Dinakaran.