×

அயப்பாக்கம் பிரதான சாலையில் 7 கடைகளில் கொள்ளை

அம்பத்தூர்: அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கம் பிரதான சாலையில் உள்ள பிரபல மூக்கு கண்ணாடி கடை பூட்டை, கடந்த 9ம் தேதி இரவு மர்ம நபர் உடைக்க முயன்றார். ஆனால், முடியாததால் திரும்பி சென்றார். அதே சாலையில் உள்ள மருந்தகம் ஒன்றில் ரூ.30,000 மற்றும் செல்போன் திருடு போனது.

இதே சாலையில், யூடியூபர்களான டி.டி.எப்.வாசன் மற்றும் அஜீஸ் ஆகியோர், பைக் உதிரி பாகங்கள் விற்பனை கடை நடத்தி வருகின்றனர். நேற்று அதிகாலை இவரது கடை பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், கடையில் இருந்த ரூ.20,000, மூன்று உயர் ரக ஹெல்மேட் ஆகியவற்றை திருடி சென்றனர்.

பின்னர், அருகில் உள்ள காலணி கடை பூட்டை உடைத்து, ரூ.20,000, ரெயின் கோர்ட், பை, உணவகத்தின் பூட்டை உடைத்து ரூ.30,000 மற்றும் மளிகை கடை பூட்டை உடைத்து ரூ.4000 திருடியுள்ளனர். மேலும், பழச்சாறு கடை, மெத்தை கடை, ஓட்டுனர் பயிற்சி பள்ளி அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும், மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post அயப்பாக்கம் பிரதான சாலையில் 7 கடைகளில் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Robbery ,Ayyappakkam ,Ampathur ,Ayyappakkam main ,Dinakaran ,
× RELATED திருவாரூரில் 204 கொள்ளை வழக்குகளில் 378 பேர் கைது: எஸ்.பி. ஜெயக்குமார் பேட்டி