×

மதுரை உலக தமிழ்சங்கம் சார்பில் இளந்தமிழர் இலக்கிய பயிற்சி பட்டறை விழா: 15ம்தேதி முதல் 21ம் தேதி வரை நடக்கிறது

சென்னை: உலக தமிழ் சங்கம் சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ் வளர்ச்சி துறை வாயிலாக கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகளில் வெற்றி பெறும் 200 பேருக்கு இளந்தமிழர் இலக்கிய பயிற்சி பட்டறை ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இளந்தமிழர் இலக்கிய பயிற்சி பட்டறை விழா மதுரை உலகத் தமிழ் சங்கத்தில் 15.12.2024 முதல் 21.12.2024 வரை நடக்கிறது. கல்லூரி மாணவர்களிடையே முதல் நாளில் ‘இயல் இசை அன்றும் இன்றும்’ என்ற தலைப்பில் ஞா.கற்பகமும் ‘எண்ணிய எண்ணியாங்கு எய்துப’ என்ற தலைப்பில் த.ஸ்டாலின் குணசேகரன் ‘தொல்காப்பியம் கூறும் புறத்திணை வாழ்வியல்’ என்ற தலைப்பில் மெய்ஞானி பிரபாகரபாபுவும் ‘சங்கத்தமிழ் சுட்டும் விழுமியங்கள்’ என்ற தலைப்பில் சி.ஆர்.மஞ்சுளாவும் ‘நெய்தல் காட்டும் வாழ்வியல்’ என்ற தலைப்பில் குறும்பனை சி.பெர்லினும் ‘சங்க கால வரலாற்றில் சூது பவள மணிகள்’ என்ற தலைப்பில் ஜ.வள்ளியும், 2ம் நாளில் ‘தமிழ் மென்பொருள் பயன்பாடுகள்’ என்ற தலைப்பில் துரை மணிகண்டனும், ‘அற்றம் காக்கும் கருவி’ என்ற தலைப்பில் ச.கார்த்திகை செல்வனும், ‘தமிழ் சட்டமும் பேசும்’ என்ற தலைப்பில் வழக்கறிஞர் பால சீனிவாசனும், ‘குன்றென நிமிர்’ என்ற தலைப்பில் நித்யா செல்வகுமாரும், ‘நடிகர் திலகமும் செந்தமிழும்’ என்ற தலைப்பில் ஆலங்குடி வெள்ளைச்சாமியும், ‘நோக்கரிய நோக்கே” என்ற தலைப்பில் இயக்குநர் ஜெ.எஸ்.சந்தானம் தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொள்கின்றனர். மேலும் மாணவர்கள் புத்துணர்ச்சி பெறும் வகையில் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றக் கலைக் குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் நாள்தோறும் மாலை 6 மணி முதல் 8 மணி வரை நடைபெறும்.

The post மதுரை உலக தமிழ்சங்கம் சார்பில் இளந்தமிழர் இலக்கிய பயிற்சி பட்டறை விழா: 15ம்தேதி முதல் 21ம் தேதி வரை நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Madurai World Tamil Sangam Youth Literary Training Workshop Festival ,Chennai ,World Tamil Association ,Department of Tamil Development ,Ilantamizhar Literary Training Workshop ,
× RELATED மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் டிச.15...