×

கடை முன் நிறுத்திய டூவீலர் திருட்டு

சேலம், டிச.12: சேலம் ஜாகீர் அம்மாபாளையம் சாஸ்திரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமன் (42). இவர் கடந்த 5ம் தேதி, ஜாகீர்ரெட்டிப்பட்டி பகுதியில் உள்ள காபி கடை முன்பு, தனது டூவீலரை நிறுத்தி விட்டு உள்ளே சென்றுள்ளார். பின்னர் மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது மர்மநபர்கள் டூவீலரை திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து ராமன் சூரமங்கலம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கடை முன் நிறுத்திய டூவீலர் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Salem ,Raman ,Salem Zakir Ammapalayam Shastri Nagar ,Zakirrettipatti ,Dinakaran ,
× RELATED கலைஞரின் செயலாளர் ஏ.எம்.ராமன் மறைவு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி