×

டூவீலரில் சென்ற பெண்ணிடம் 6 பவுன் செயின் பறித்த வாலிபர்

சங்ககிரி, டிச.11: சங்ககிரி அருகே மொலாரன்காடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி மனைவி கந்தம்மாள் (53). இவர் வீட்டில் மாடுகள் வைத்து பால் கறந்து பச்சாம்பாளையம் பகுதியில் உள்ள வீடுகளுக்கு பால் ஊற்றி வருகிறார். இவர் வழக்கம்போல் நேற்று காலை பச்சாபாளையத்தில் உள்ள வீடுகளுக்கு பால் ஊற்றி விட்டு, காலை 7.30 மணிக்கு தனது டூவீலரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பெரியாம்பாளையம் பகுதியில் இவரது டூவீலரை பின் தொடர்ந்து, டூவீலரில் வந்த 30வயது மதிக்க மர்ம நபர், கந்தம்மாள் கழுத்தில் அணிந்து இருந்த ஆறரை பவுன் தாலிக்கொடியை பறித்துக்கொண்டு தப்பி சென்றார். இது குறித்து கந்தம்மாள் சங்ககிரி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ், எஸ்ஐ கண்ணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து நகை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

The post டூவீலரில் சென்ற பெண்ணிடம் 6 பவுன் செயின் பறித்த வாலிபர் appeared first on Dinakaran.

Tags : Sangakiri ,Subramani ,Kandammal ,Molarankadu ,Pachampalayam ,Pachapalayam ,
× RELATED குரங்குகள் தொல்லையால் அவதி