திருச்சி, டிச.11: மார்கழி மாதம் பிறப்பதற்கு முன் திருச்சியில் கடும் குளிர் நிலவி வருவதால் ஊட்டிபோல் மாறிவருகிறது. தமிழகத்தில் மார்கழி மாதம் பிறந்தால் பனிப்பொழிவு துவங்கும், இந்த பனிப்பொழிவு தைமாதம் வரை நீடிக்கும். ஆனால் தற்போது கார்த்திகை மாதம் பிறந்தது முதலே கடும் பனிப்பொழிவும், மழையும் விட்டு விட்டு பெய்து வந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக திருச்சியில் கடும் பனிவு நீடித்து வருகிறது. மாலை 6 மணிக்கு துவங்கும் பனிப்பொழிவு அதிகாலை 9 மணி வரை நீடிக்கிறது. இதனால் திருச்சி ஊட்டிபோல் ஜில்லென்ற சூழல் நீடிக்கிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
The post கடும் குளிரால் ஊட்டிபோல் மாறிய திருச்சி appeared first on Dinakaran.