- பரியாறு ஓடை
- தராயூர்
- தரியூர்
- பரியாரு
- அம்மாம்பாளையம்
- பச்சிமலை
- திருச்சி மாவட்டம் தரட்டியூர்
- பறையாறு ஓடை
- தரட்டியூர்
துறையூர், டிச.9: துறையூர் அருகே வரையாற்று ஓடையில் குளிக்க மகிழும் சுற்றுலா பயணிகள். வரையாற்று பகுதிக்கு செல்லஅடிப்படை வசதிகள் அமைத்துதர வேண்டும் என சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பச்சைமலையின் அடிவாரப் பகுதியான அம்மம்பாளையம் என்ற ஊரிலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது வரையாற்று ஓடை. வார விடுமுறை நாட்கள் ஆன சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் இந்த ஓடைக்கு சென்று குளித்து மகிழ்ந்தனர்.
வரையாற்று ஓடைக்குச் செல்ல துறையூரில் இருந்து கோவிந்தாபுரம் கிருஷ்ணாபுரம், மருவத்தூர் அம்மம்பாளையம் சென்று அங்கிருந்து சுமார் 2 கிலோமீட்டர் மண் சாலை வழியாக பச்சை மலை அடிவாரத்தின் கீழே இந்த ஓடை அமைந்துள்ளது. துறையூர் பெரிய ஏரிக்கு நீர்வரத்து ஆதாரம் இந்த வரையாறு ஓடை ஆகும். மழைக்காலங்களில் மழை பெய்தால் அந்த மழை நீர் ஆனது பச்சை மலை ஏரிக்காடு பகுதியில் இருந்து ஆரம்பித்து குண்டூர் பகுதி வரை செல்லக்கூடிய மலை தொடரில் அம்மம்பாளையம் அடிவாரம் அருவிக்கு தண்ணீர் வந்தடைகிறது.
The post துறையூர் அருகே வரையாற்று ஓடைக்கு தார்சாலை அமைக்கப்படுமா? appeared first on Dinakaran.