×

ஆண் சடலம் மீட்பு

 

ஈரோடு, டிச. 10: ஈரோடு ரயில் நிலையம் எதிரில் உள்ள உணவகம் ஒன்றின் அருகில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக ஈரோடு தெற்கு போலீசாருக்கு நேற்று முன் தினம் தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சடலமாக மீட்கப்பட்டவருக்கு சுமார் 35 வயது இருக்கும் என்றும், அவர் அப்பகுதியில் காலியாக உள்ள கடைக்குள் இருந்து போதையில் வெளியே வந்து, அருகில் இருந்த சுவரின் மீது ஏறியதாகவும், அப்போது, கீழே விழுந்து இறந்து விட்டதாகவும் அங்கு உள்ளவர்கள் தெரிவித்தனர்.

ஆனால், உயிரிழந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது உள்ளிட்ட விவரங்கள் தெரியவில்லை. இதையடுத்து போலீசார் சடலத்தை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

The post ஆண் சடலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Erode ,Erode South Police ,Erode Railway Station ,
× RELATED ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் சைபர் கிரைம் விழிப்புணர்வு