- நீதிமன்றம்
- நந்த பூஜை
- மகா தீபம்
- வெள்ளியங்கிரி மலைக்கோயில்
- கோயம்புத்தூர்
- சென்னை
- சென்னை உயர் நீதிமன்றம்
- கார்த்திகாய் மஹா தீபம்
- கார்த்திகை தீபம்
- திருகல்யாண வைபவ
சென்னை: கோவை வெள்ளியங்கிரி மலைக் கோயிலில் ஜனவரி.14-ம் தேதி வரை நந்த பூஜை மற்றும் கார்த்திகை மகா தீபம் ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. வெள்ளியங்கிரி மலைக் கோயிலில் கார்த்திகை தீபம், திருக்கல்யாண வைபவத்துக்கு அனுமதி அளிக்கக் கோரிய வழக்கு தொடரப்பட்டது. முட்டத்துவயல் கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் மாவட்ட வன அதிகாரி விதித்த நிபந்தனை அடிப்படையில் ஆயுதங்கள் எடுத்துச் செல்லக்கூடாது, விலங்குகளை வேட்டையாடக் கூடாது என தெரிவித்தார். இதனை அடுத்து காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை மலைக் கோயிலில் பூஜைகள் நடத்த ஐகோர்ட் அனுமதி வழங்கியது. முட்டத்துவயல் கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கை ஐகோர்ட் முடித்து வைத்து உத்தரவிட்டது.
The post கோவை வெள்ளியங்கிரி மலைக் கோயிலில் நந்த பூஜை, மகாதீபம் ஏற்ற ஐகோர்ட் அனுமதி..!! appeared first on Dinakaran.