- ஓதங்கரா
- அமைச்சர்
- ரகுபதி
- ஓதங்கர தமிழ்
- சென்னை
- தமிழ்நாடு சட்டமன்றம்
- சட்ட விவகாரங்களுக்கான முதலமைச்சர்
- கே
- ஸ்டாலின், துரைமுருகன்
- உதவி நிதி
- ஓடங்கரா
- ரகுபதி
- தமிழ்
சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை இன்று கூடியது. சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துரைமுருகனுக்கு அடுத்ததாக முதல் வரிசையில் 3-வது இருக்கை துணை முதலமைச்சர் உதயநிதிக்கு வழங்கப்பட்டுள்ளது. மறைந்து முன்னாள் உறுப்பினர்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சட்டப்பேரவையில் கேள்வி நேரம் தொடங்கியது. இதில் புதிய சிறை கட்டப்பட வேண்டும் என உறுப்பினர் ஊத்தங்கரை தமிழ்ச்செல்வன் கோரிக்கை வைத்தார்.
இதற்கு அமைச்சர் ரகுபதி அளித்த பதில்:
ஊத்தங்கரையில் கிளைச் சிறை ஏற்கனவே இயங்கி வருகிறது. அதில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் தான் தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ஊத்தங்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள தாலுக்காக்களில் 9 காவல் நிலையங்கள் உள்ளன. திருப்பத்தூரில் உள்ள கிளை சிறையில் அங்கிகரிக்கப்பட்ட அடைப்பு எண் 74,ஆனால் 7.12.2024 அன்று கணக்குப்படி 29 கைதிகள் மட்டுமே உள்ளனர். 27 கிலோ மீட்டர் தொலைவு, அரூர் கிளை சிறையில் அங்கிகரிக்கப்பட்ட அடைப்பு எண்ணிக்கை 48, 7.12.2024 அன்று கணக்குப்படி 5 சிறைவாசிகள் மட்டுமே அடைக்கப்பட்டுள்ளனர். 27 கிலோ மீட்டர்.
செங்கம் கிளை சிறையில் அங்கிகரிக்கபட்ட அடைப்பு எண்ணிக்கை 9, அதில் 4 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். கிலோ மீட்டர் 31. கிருஷ்ணகிரி மாவட்ட கிளை சிறையில் அங்கிகரிக்கப்பட்ட எண்ணிக்கை 73, அங்கு அடைக்கப்பட்டுள்ள சிறைவாசிகளின் எண்ணிக்கை 18 ஆகும். கிலோ மீட்டர் 49. எனவே இந்த இடங்களுக்கு காவல் நிலையத்தில் இருந்து சிறைவாசிகளை அழைத்து செல்வதற்கு சிரமமான சூழ்நிலை இல்லை. மேலும் அந்தந்த சிறைகளில் குறிப்பிட்ட அளவுக்கு அதிகளவில் சிறைவாசிகள் இல்லை. எனவேதான் இந்த பராமரிப்பு பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன. விரைவில் பராமரிப்புப் பணி முடிந்து கிளைச்சிறை மீண்டும் திறக்கப்படும். எனவே புதிய சிறை அமைக்க வேண்டிய தேவை கிடையாது என புதிய சிறை கேட்ட உறுப்பினர் ஊத்தங்கரை தமிழ்ச்செல்வனுக்கு அமைச்சர் ரகுபதி பதிலளித்துள்ளார்.
The post ஊத்தங்கரையில் புதிய சிறை அமைக்க வேண்டிய தேவை கிடையாது: ஊத்தங்கரை தமிழ்ச்செல்வனுக்கு அமைச்சர் ரகுபதி பதில்..! appeared first on Dinakaran.