சென்னை: கூடுவாஞ்சேரியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் நந்தகுமார். இவரது மனைவி அர்ச்சனா. இவர்களுக்கு 11 மாத குழந்தை உள்ளது. குழந்தைக்கு வரும் 20ம் தேதி முதல் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட இருந்த நிலையில், விழாவிற்கான அழைப்பிதழ்களை உறவினர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் திருவள்ளூரில் உள்ள உறவினர்களுக்கு அழைப்பிதழ் வழங்குவதற்காக ஆட்டோவில் பெற்றோர்கள் குழந்தையுடன் சென்றுள்ளனர். மாங்காடு அருகே சென்றுகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையின் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது.
இதில் மூவரும் காயமடைந்தனர். இதனை கண்ட அக்கமபக்கத்தினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் படுகாயமடைந்த 11 மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. தாய் மற்றும் தந்தை ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post முதல் பிறந்தநாள் விழாவிற்காக அழைப்பிதழ் வழங்க சென்றபோது ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 11 மாத குழந்தை உயிரிழப்பு appeared first on Dinakaran.