சென்னை: இந்த காலத்துல பெய்யுற மழையெல்லாம் அணையிலேயே நிற்க மாட்டேங்குது என சட்டப்பேரவை கேள்வி நேரத்தில் உறுப்பினர்கள் கேள்விகளுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியது. மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கான இரங்கல் தீர்மான உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அதில், சி.பி.எம். முன்னாள் பொதுச் செயலாளர் சீதாராம் எச்சூரி, ரத்தன் டாடா, எஸ்ரா சற்குணம் உள்ளிட்டோரின் மறைவுக்கும் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. பின்னர், சட்டப்பேரவையில் கேள்வி நேரம் அலுவலில். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
அந்த வகையில் சட்டப்பேரவை கேள்வி நேரத்தில் உறுப்பினர்கள் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், இந்த காலத்துல பெய்யுற மழையெல்லாம் அணையிலேயே நிற்க மாட்டேங்குது. சோமரசம்பேட்டை அருகே உய்யகொண்டான் வாய்க்காலில் தடுப்பணை கட்ட இயலாது, வேண்டுமென்றால் அந்த பகுதியில் உய்யகொண்டான் கால்வாய் சீரமைத்து தரப்படும். உய்யகொண்டான் கால்வாய் 69 கி. மீ தூரம் சொல்கிறது, வேளாண் பாசனத்திற்கான கால்வாய் இது. இதன் மூலம் தஞ்சை திருச்சியில் 40,000 ஏக்கர் நிலங்கள் 11 மாதங்கள் பாசன வசதி பெறுகிறது. திருச்சி உய்யகொண்டான் வாய்க்காலில் தடுப்பணை கட்டுவது குறித்து அரசு ஆய்வுசெய்யும் என அமைச்சர் துரைமுருகன் பதில் தெரிவித்தார்.
The post இந்த காலத்துல பெய்யுற மழையெல்லாம் அணையிலேயே நிற்க மாட்டேங்குது..”சட்டப்பேரவை கேள்வி நேரத்தில் உறுப்பினர்கள் கேள்விகளுக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்! appeared first on Dinakaran.