×

திருப்புவனம் அருகே புதிய ரேஷன் கடை திறப்பு

திருப்புவனம், டிச.9:திருப்புவனம் அருகே ஏனாதி ஊராட்சி ஏனாதி செவலில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. ஏனாதி செவல் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் தங்கள் பகுதியில் ரேஷன் கடை வேண்டும் என மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. தமிழரசி ரவிக்குமாரிடம் கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து எம்.எல்.ஏ. தமிழரசி தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.9.13 லட்சம் ஒதுக்கீடு செய்தார்.

அந்த நிதியில் ஏனாதி சிவகங்கை சாலையில் ரேஷன் கடை கட்டப்பட்டது. இதனை எம்.எல்.ஏ தமிழரசி ரவிக்குமார் திறந்து வைத்தார்.  இந்நிகழ்ச்சியில் பி.டி.ஓ பாலசுப்பிரமணியன், வட்ட வழங்கல் அலுவலர் சுந்தரி, கூட்டுறவு சார்பதிவாளர் ராஜ லெட்சுமி, திமுக ஒன்றிய செயலாளர் கடம்பசாமி, ஏனாதி ஊராட்சி தலைவர் நீலமேகம், துணைத்தலைவர் அழகுப்பிள்ளை, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் அச்சங்குளம் முருகன், மடப்புரம் அப்பாச்சாமி, மகேந்திரன், கார்த்தி மார்நாடு சந்திரசேகரன் உட்பட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.

The post திருப்புவனம் அருகே புதிய ரேஷன் கடை திறப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruppuvanam ,Enadi Panchayat ,Enadi Sewal ,Thirupuvanam ,Enathi Sewal ,
× RELATED தூய்மை பணியாளர்களுக்கு மாற்று இடம் வழங்க கலெக்டர் ஆய்வு