×

ஹெல்மெட் கூட அணியாமல் திருட்டு பைக்கில் ஹாயாக உலா வரும் கொள்ளையன்: சிசிடிவி காட்சி வைரல்

சென்னை: சென்னையில் வாகனங்களை திருடிவிட்டு யாராலும் அவ்வளவு எளிதாக தப்பிக்க முடியாது. ஏனெனில் எல்லா இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் உள்ளன. நம்பர் பிளேட்டை வைத்து, அந்த வண்டி எங்கு சென்றது என்பதை போலீசாரால் எளிதாக கண்டுபிடித்து விட முடியும். ஆனால் மிக அபூர்வமாகவே சில திருடர்கள் சிக்காமல் தப்பிப்பார்கள். அப்படித்தான் ஒரு திருடன் ஒன்றிய அரசு அதிகாரியின் பைக்கை திருடி சென்று தப்பித்துள்ளார்.

பாரிமுனை தம்புசெட்டி தெருவில் கடந்த ஜூலை மாதம் 16ம் தேதி பைக் ஒன்று திருடு போனது. இந்த பைக் மண்ணடியில் வசிக்கும் ஒன்றிய அரசு உயர் அதிகாரிக்கு சொந்தமானது. இதுகுறித்து அவர், எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பைக்கை திருடிய நபரை கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் போலீசார் கண்டுபிடித்தனர்.

அதில் இருசக்கர வாகனத்தை திருடிய மர்ம நபர், பாரிமுனை வழியாக கொடிமர சாலை, நேப்பியர் பாலம், மெரினா, கலங்கரை விளக்கம், சாந்தோம், அடையாறு, திருவான்மியூர் வழியாக கிழக்கு கடற்கரை சாலை வரை செல்கிறார். ஹெல்மெட் அணியாமல் ஜாலியாக சென்ற அவர், வாகன சோதனை எதிலும் சிக்கவில்லை. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

The post ஹெல்மெட் கூட அணியாமல் திருட்டு பைக்கில் ஹாயாக உலா வரும் கொள்ளையன்: சிசிடிவி காட்சி வைரல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED காதலனை அடித்து விரட்டிவிட்டு மாணவியை...