×

ரூ.20,000 கோடி கொடுங்க..ஒன்றிய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

கடலூர்: பெஞ்சல் புயல் பாதிப்புக்கு ஒன்றிய அரசு ரூ.20 ஆயிரம் கோடி கொடுக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளார். பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் அருகே உள்ள கண்டக்காடு கிராமத்தில் பாமக சார்பில் நேற்று நடைபெற்ற மருத்துவ முகாமை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்தார். பின்னர் நிருபர்களிடம் அன்புமணி கூறுகையில், ‘வெள்ளம் வந்ததையடுத்து நோய் பரவும் அபாயம் இருப்பதால் இந்த பகுதியில் மருத்துவ முகாம் நடத்துகிறோம். மருத்துவ முகாமை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.வட தமிழகத்தில் நாலரை லட்சம் ஏக்கரில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு அரசு முழு நிவாரணம் கொடுக்க வேண்டும். ஒன்றிய அரசு இதற்கு அதிக நிதி கொடுக்க வேண்டும். தற்போது ரூ.944 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. ஆனால் ரூ.20 ஆயிரம் கோடி ரூபாய் கொடுக்க வேண்டும்’ என்றார்.

The post ரூ.20,000 கோடி கொடுங்க..ஒன்றிய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Anbumani ,United Government ,Cuddalore ,Union government ,Cyclone Benjal ,Kandakkadu ,
× RELATED துணைவேந்தர் நியமனம்.....