×

ஜூனியர் ஆசிய கோப்பை இறுதி போட்டியில் வங்கதேசம் வெற்றி

துபாய்: 19 வயதுக்கு உட்பட்டோர் மோதும் ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் ஒரு நாள் போட்டிகள் 8 நாடுகள் இடையே ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வந்தன. துபாயில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் இந்தியா – வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம், 49.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 198 ரன் எடுத்தது.

இதையடுத்து, 199 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. துவக்க வீரர்கள் ஆயுஷ் மாத்ரே 1, வைபவ் சூர்யவன்ஷி 9 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி தந்தனர். பிற வீரர்களும் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். இறுதியில், 35.2 ஓவர் முடிவில் இந்திய அணி எல்லா விக்கெட்டுகளையும் இழந்து 139 ரன் எடுத்தது. இதனால் 59 ரன் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது. இதையடுத்து ஆசிய கோப்பை வங்கதேசம் அணிக்கு வழங்கப்பட்டது.

The post ஜூனியர் ஆசிய கோப்பை இறுதி போட்டியில் வங்கதேசம் வெற்றி appeared first on Dinakaran.

Tags : Bangladesh ,Junior Asia Cup ,Dubai ,Under-19 ,United Arab Emirates ,India ,Dinakaran ,
× RELATED மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை சாம்பியன்...