×

அண்ணாநகர் பகுதி சாலையில் இளம்பெண்ணுடன் பைக் சாகசம்: வீடியோ வைரலால் வாலிபர் கைது

அண்ணாநகர்: அண்ணாநகர் பகுதியில் உள்ள சாலையில் இளம்பெண்ணுடன் பைக் சாகசத்தில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்தனர். சென்னை அண்ணாநகர் பகுதியில் இளம்பெண் ஒருவருடன் வாலிபர், பைக் சாகசத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இதையடுத்து பைக் நம்பரை வைத்து அண்ணாநகர் போக்குவரத்து போலீசார் தேடி வந்தனர்.

இந்தநிலையில், இன்ஸ்டாகிராம் இளம்பெண்ணுடன் ரீல்ஸ் பதிவிட்ட வாலிபர் அண்ணா நகரை சேர்ந்த ராஜ்குமார் என்பதும் தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றிவருவதும் தெரிந்தது. ‘‘இந்த வீடியோ கடந்த ஒரு வருடத்துக்கு முன் எடுக்கப்பட்டதும் என்றும் தவறுதலாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுவிட்டேன்’ என்று வாலிபர் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து ராஜ்குமாரிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

The post அண்ணாநகர் பகுதி சாலையில் இளம்பெண்ணுடன் பைக் சாகசம்: வீடியோ வைரலால் வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Annanagar ,Chennai ,Dinakaran ,
× RELATED குடியிருப்புவாசிகளிடம் தகராறு...