அறந்தாங்கி, டிச.8: அறந்தாங்கி அருகே அழியாநிலை வெள்ளாற்றின் பகுதியில் அனுமதி இல்லாமல் மணல் அள்ளுவதாக அறந்தாங்கி கோட்டாட்சியருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இதையடுத்து கடந்த 30ம் தேதி அழியாநிலை வெள்ளாற்று பகுதியில் அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் சிவக்குமார் நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது மணல் அள்ள பயன்படுத்திய பொக்லைன் வாகனத்தை பறிமுதல் செய்து அறந்தாங்கி போலீசாரிடம் ஒப்படைத்தார். இந்நிலையில் அறந்தாங்கி பாசனபிரிவு நீர்பாசனதுறை உதவிபொறியாளர் ராமமூர்த்தி 2ம் தேதி கையொப்பமிட்ட புகார் மனு தபால் மூலம் நேற்று பெறப்பட்டது. இதையடுத்து அறந்தாங்கி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post அழியாநிலை வெள்ளாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய பொக்லைன் பறிமுதல் appeared first on Dinakaran.