×

சனிக்கிழமையை முன்னிட்டு அழியாநிலை ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு

 

அறந்தாங்கி, டிச.8: அறந்தாங்கி அருகே அழியாநிலை விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவில் சனிகிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அழியாநிலை விஸ்வரூப ஆஞ்சநேயர் கிழக்கு பார்த்த முகத்தோடு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்நிலையில் நேற்று சனிக்கிழமையை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு துளசி வடை மலர்களால் மாலை அணிவித்து மகா தீபாராதனை காண்பித்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

 

The post சனிக்கிழமையை முன்னிட்டு அழியாநிலை ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Anjaneyar temple ,Aranthangi ,Vishvarupa Anjaneya temple ,Anjaneya ,Vishvarupa ,Tulsi Vada ,Anjaneyar ,
× RELATED கற்கள் கடத்திய லாரி பறிமுதல்