தஞ்சாவூர், டிச. 8: தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலை அடுத்த புலவர்நத்தம் பகுதியில் எதிரே வந்த மினி லாரி மோதியதில் அரசு பஸ் முன்பக்க கண்ணாடி சுக்கு நூறாக உடைந்ததில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தஞ்சை மாவட்டம், பூண்டியில் இருந்து நேற்று காலை தஞ்சாவூர் பழைய பஸ் நிலையம் நோக்கி அரசு டவுன் பஸ் புறப்பட்டது. இந்த பஸ்சில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.
இந்த பஸ் தஞ்சை அருகே புலவர்நத்தம் பகுதியில் சென்றபோது, எதிரே மினிலாரி லேசாக மோதிக்கொண்டன. இதில், பஸ், மினிலாரியின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியன. விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து, அம்மாபேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post தஞ்சை அருகே பஸ் லாரி மோதி விபத்து அதிர்ஷ்டவசமாக பயணிகள் தப்பினர் appeared first on Dinakaran.