×

புழலில் பரபரப்பு சாலையில் தீப்பிடித்து எரிந்த எலக்ட்ரிக் பைக்

புழல், டிச. 8: புழல் அருகே சாலையில் சென்றபோது, திடீரென எலக்ட்ரிக் பைக் தீப்பிடித்து எரிந்து எலும்பு கூடானது. புழல் அடுத்து புத்தகரம், பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார்(36). ஆடிட்டராக பணிபுரியும் இவர், ேநற்று முன்தினம் இரவு 10 மணியளவில் பணி முடிந்ததும், தனது எலக்ட்ரிக் பைக்கில் அம்பத்தூர் புதூரில் இருந்து புழல் நோக்கி சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, புத்தகரம் சர்வீஸ் சாலையில் சென்றபோது, பைக்கில் இருந்து திடீரென தீப்பொறி ஏற்படவே, சுதாரித்துக்கொண்ட அவர் பைக்கினை நிறுத்திவிட்டு இறங்கினார். இந்நிலையில் பைக் தீப்பிடித்து மளமளவென எரியத்தொடங்கியது. இதனைகண்ட, சக வாகன ஓட்டிகள் இதுகுறித்து கொளத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில், விரைந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள், எரிந்துக்கொண்டிருந்த பைக்கினை தண்ணீரை பீய்ச்சியடித்து அணைத்தனர். இதில், வாகனம் முழுவதும் எரிந்து எலும்புக்கூடாக காட்சியளித்தது. இந்த, தீ விபத்து குறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post புழலில் பரபரப்பு சாலையில் தீப்பிடித்து எரிந்த எலக்ட்ரிக் பைக் appeared first on Dinakaran.

Tags : Caterpillar ,Rajkumar ,Pillaiyar Temple Street ,Tenathu Mundinam ,
× RELATED சங்ககிரி ராஜ்குமார் இயக்கத்தில் சத்யராஜ், சேரன் நடிக்கும் பயாஸ்கோப்