×

சிறை கைதியிடம் செல்போன் பறிமுதல்

புழல், டிச. 8: பம்மல், எம்ஜிஆர் நகர் 7வது தெருவை சேர்ந்த சத்யா(29) என்ற பெண், கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த ஜூலை மாதம் புழல் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நேற்று சிறை பெண் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, சத்யாவிடம் செல்போன் இருந்தது. அதை பறிமுதல் செய்தனர். மகளிர் சிறை அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்த புழல் போலீசார், சிறைக்குள் செல்போன் எப்படி வந்தது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சிறை கைதியிடம் செல்போன் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Caterpillar ,Satya ,7th Street ,Bammal, MGR Nagar ,Turtle Women Prison ,Dinakaran ,
× RELATED புழலில் பரபரப்பு சாலையில் தீப்பிடித்து எரிந்த எலக்ட்ரிக் பைக்