×

ஊட்டியில் ரூ.11 லட்சம் லஞ்ச பணத்துடன் பிடிபட்ட நெல்லை மாநகராட்சி உதவி கமிஷனர் சஸ்பெண்ட்

நெல்லை: நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம், பாளையங்கோட்டை மண்டலங்களில் உதவி கமிஷனராக பணியாற்றியவர் ஜஹாங்கீர் பாட்ஷா. இவர் கடந்த ஆண்டு திருவேற்காடு நகராட்சி கமிஷனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பின்னர் அங்கிருந்து ஊட்டி நகராட்சி கமிஷனராக மாற்றப்பட்டார். இந்நிலையில் ஜஹாங்கீர் பாட்ஷா ஊட்டியில் இருந்து காரில் சென்ற போது லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவரது வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அவரது காரில் இருந்து கத்தை, கத்தையாக 500 ரூபாய் நோட்டுக்களுடன் லஞ்ச பணம் ரூ.11.70 லட்சம் பிடிபட்டது. இதையடுத்து காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஜஹாங்கீர் பாட்ஷா, பின்னர் நெல்லை மாநகராட்சி உதவி கமிஷனராக மாற்றப்பட்டார். லஞ்ச பணத்துடன் பிடிபட்ட உதவி கமிஷனரை நெல்லைக்கு மாற்றுவதா என எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில் உதவி கமிஷனர் ஜஹாங்கீர் பாட்ஷாவை சஸ்பெண்ட் செய்து நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராசு உத்தரவிட்டுள்ளார்.

The post ஊட்டியில் ரூ.11 லட்சம் லஞ்ச பணத்துடன் பிடிபட்ட நெல்லை மாநகராட்சி உதவி கமிஷனர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Municipal Assistant Commissioner ,Rice ,Jahangir Badsha ,Malappalayam ,Palaiangkot ,Nella Municipality ,Municipal Commissioner ,Thiruvananthapuram ,commissioner ,Ooty ,Jahangir Patsha ,Municipal Assistant Commissioner of Rice ,Dinakaran ,
× RELATED திருத்தணி அருகே சரக்கு வாகனத்தில் 2 டன் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது