×

உள்நாட்டுப்போர் வெடித்தது சிரியாவிலிருந்து இந்தியர்கள் வெளியேற அதிரடி உத்தரவு: 3.70 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு ஓட்டம்

டமாஸ்கஸ்: சிரியாவில் உள் நாட்டுப்போர் வெடித்ததால் அங்கு இருக்கும் இந்தியர்கள் அங்கிருந்து வெளியேறுமாறு ஒன்றிய அரசு அறிவுறுத்தி உள்ளது. சிரியாவில் கடந்த 2011ம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டுப் போரில் அதிபர் பஷர் அல்-அஸாத் படைகளுக்கு ஆதரவாக ரஷ்யாவும், கிளர்ச்சிப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளும் செயல்பட்டன. இந்நிலையில் அலெப்போ மாகாணத்தில் ஹெச்டிஎஸ் கிளர்ச்சிப் படையினர் கடந்த வாரம் திடீரென தாக்குதல் நடத்தி அரசுக் கட்டுப்பாட்டுப் பகுதிகளைக் கைப்பற்றினர்.

தொடர்ந்து முன்னேறி வந்த கிளர்ச்சிப் படையினர், நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போவைக் கைப்பற்றினர். இவர்களின் ஆக்கிரமிப்பை தடுப்பதற்காக ரஷ்யாவும், சிரியாவும் வான்வழித் தாக்குதல் நடத்திவந்தாலும், அவர்கள் தொடர்ந்து முன்னேறி இன்னொரு நகரான ஹமாவையும் கைப்பற்றினர். நாளுக்கு நாள் போர் பதற்றம் அதிகரித்து வருவதால், வடமேற்கு சிரியாவில் 3.70 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான பகுதிகளை நோக்கி வெளியேறினர். இதனால் சிரியாவில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக இந்திய குடிமக்கள் யாரும், சிரியாவிற்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என ஒன்றிய அரசு எச்சரித்துள்ளது.

The post உள்நாட்டுப்போர் வெடித்தது சிரியாவிலிருந்து இந்தியர்கள் வெளியேற அதிரடி உத்தரவு: 3.70 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு ஓட்டம் appeared first on Dinakaran.

Tags : Indians ,Syria ,Damascus ,civil war ,Union Government ,war ,Russia ,President Bashar al-Assad ,
× RELATED சிரியாவிலிருந்து 75 இந்தியர்கள்...