×

மபி அரசு பள்ளியில் சோகம் தலைமை ஆசிரியரை சுட்டுக் கொன்ற மாணவன்

சத்தர்பூர்: மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டம் தமோராவில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் எஸ்.கே.சக்சேனா (55). இவர் கடந்த 5 ஆண்டுகளாக அங்கு பணியாற்றி வந்தார். அந்த பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவன் சரியாக படிக்காததால் தலைமை ஆசிரியர் சக்சேனா கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவன் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் பள்ளியின் கழிவறைக்கு சென்று விட்டு திரும்பிய சக்சேனாவை தலையில் சுட்டுக் கொன்றார். அதன்பின் தலைமை ஆசிரியரின் பைக்கை எடுத்து கொண்டு நண்பருடன் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார். இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் 2 மாணவர்களையும் கைது செய்தனர்.

அவா்களிடம் இருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. போலீஸ் விசாரணையில் தலைமை ஆசிரியர் சக்சேனா அடிக்கடி திட்டியதால் சுட்டுக்கொன்றதாக மாணவன் தெரிவித்தார். அவர் அதற்காக வருத்தப்பட்டது போல் தெரியவில்லை. அவர் ஒரு மனநோயாளியாக தெரிகிறார். அதற்கான சோதனைகள் நடத்தப்படுகிறது. அவருடன் கைதான வகுப்பு தோழர், தலைமை ஆசிரியரை சுடுவதை தடுக்க வந்ததாகவும், ஆனால் சுட்டுவிட்டதால் பயத்தில் தப்பி ஓடியதாகவும் கூறியுள்ளார். அவர் நிரபராதியா என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது என்று போலீசார் தெரிவித்தனர்.

The post மபி அரசு பள்ளியில் சோகம் தலைமை ஆசிரியரை சுட்டுக் கொன்ற மாணவன் appeared first on Dinakaran.

Tags : Mabi Govt School ,Chhattarpur ,Headmaster ,SK Saxena ,Government Higher Secondary School ,Tamora, Chhattarpur district ,Madhya Pradesh ,
× RELATED மத்தியப்பிரதேச மாநிலம் சத்தர்பூரில் பள்ளி முதல்வரை மாணவன் சுட்டுக் கொலை