×

மெத்தபெட்டமைன் போதை ஊசிகளுடன் இருவர் கைது: போலீசார் அதிரடி

மதுரவாயல் மற்றும் ராமாபுரம் பகுதியில் மெத்தபெட்டமைன் போதைப்பொருளுடன் சிக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர். சென்னை மதுரவாயல் மேம்பாலத்தின் கீழ் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக ஆய்வாளர் பூபதி தலைமையிலான தனிப்படை போலீஸார் அங்கு சென்று சோதனை நடத்தினர்.

அப்போது முன்னுக்குப்பின் முரணாக பேசிய நபர் ஒருவரை சோதனை செய்தனர். அவரிடம் 2 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் மற்றும் 4 போதை ஊசிகள் இருந்தன. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார், போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட நபர் வானகரம் பகுதியில் வசிக்கு சோமங்கர் (37) என்பது, அவர் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இதேபோல ராமாபுரம் போலீசார் நடத்திய சோதனையில் பல்லாவரத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர், திருமலை நகர் பகுதியில் பிடிபட்டார். அவரிடம் இருந்து 1 புள்ளி 7 கிராம் மெத்தம்பெட்டமைன், 2 செல்போன்கள் மற்றும் ஒரு ராயல் என்பீல்டு பைக் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் பின்னர் சிறையில் அடைத்தனர்.

The post மெத்தபெட்டமைன் போதை ஊசிகளுடன் இருவர் கைது: போலீசார் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Madurai ,Ramapuram ,Madurai Development ,Chennai ,Inspector ,Bhopati ,Dinakaran ,
× RELATED சென்னை ராமாபுரத்தில் தோழியுடன்...