- தமிழ்நாடு அணி
- தேசிய ஸ்கேட்டிங் ஹாக்கி போட்டி
- கோயம்புத்தூர்
- 62வது தேசிய ரோலர் ஸ்கேட்டிங் ஹாக்கி போட்டி
- பொள்ளாச்சி
- மைசூர்
- ரோலர் ஸ்கேட்டிங் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஆந்திரப் பிரதேசம்
- கேரளா
- தெலுங்கானா
- கர்நாடக
- புதுச்சேரி
- உத்திரப்பிரதேசம்
- தின மலர்
கோவை, டிச. 7: இந்திய ரோலர் ஸ்கேட்டிங் பெடரேஷன் சார்பாக 62வது தேசிய ரோலர் ஸ்கேட்டிங் ஹாக்கி போட்டி கோவை, பொள்ளாச்சி மற்றும் மைசூரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, தெலங்கானா, கர்நாடகா, புதுச்சேரி, உத்தரபிரதேசம், சண்டிகர், ஹரியானா, பஞ்சாப், லடாக் உள்ளிட்ட 21 மாநிலங்களில் இருந்து அணிகள் பங்கேற்றுள்ளது.
இதில், கேடட், சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர் ஆகிய பிரிவுகளில் லீக் முறையில் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
கேடட் பிரிவினருக்கான போட்டி கோவை வஉசி மைதனானத்தில் உள்ள ஸ்கேட்டிங் மைதானத்தில் நடைபெற்றது. மாணவர்கள் பிரிவின் முதல் போட்டியில், தமிழ்நாடு அணியுடன் சண்டிகர் அணி மோதியது. இதில் தமிழ்நாடு அணி 7-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இரண்டாம் போட்டியில், ஆந்திரா அணியுடன் கர்நாடகா அணி மோதியது. இதில் கர்நாடகா அணி 6-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மாணவிகள் பிரிவின் முதல் போட்டியில் கேரளா அணியுடன் கர்நாடகா அணி மோதியது. கேரளா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
The post தேசிய ஸ்கேட்டிங் ஹாக்கி போட்டி தமிழ்நாடு அணி வெற்றி appeared first on Dinakaran.