- அம்பேத்கர்
- சென்னை
- தமிழ்நாடு காங்கிரஸ்
- ஜனாதிபதி
- செல்வப்பெருந்தகாய்
- காங்கிரஸ்
- டி.என்.அசோகன்
- சுகுமாரன்
- Thiruvotiyur
- கே.ஆர்.சிவகுமார்
- தமாகா மாநில பொதுக்குழு
- செல்வாப்பேருந்தகை
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை முன்னிலையில், தமாகா மாநில பொதுக்குழு உறுப்பினர் திருவொற்றியூர் கே.ஆர்.சிவகுமார் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் டி.என்.அசோகன், சுகுமாறன் ஏற்பாட்டில் காங்கிரசில் இணைந்தனர். தொடர்ந்து, செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது: பெரும்புதூர் தனியார் நிறுவன விடுதி கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 3 பேர் இறந்தனர். அப்போது, விஷவாயு தாக்குதலுக்கு ஆளாவதை தவிர்க்க நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இயந்திரங்கள் வழங்க வேண்டும் என முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் சென்றோம்.
இன்று அம்பேத்கர் நினைவு நாளில் அது செயல்படுத்தப்பட்டுள்ளது. விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 213 வண்டிகளை வழங்கிய முதல்வருக்கு நன்றி. திட்டத்தை தூய்மை பணியாளர்களை இன்று அவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தி மனித கழிவுகளை யாரும் கையால் அள்ளக்கூடாது என்ற உயரிய நோக்கத்துடன் நடைமுறைப்படுத்தியுள்ளார்.
The post அம்பேத்கர் நினைவு நாளில் வரலாற்று சிறப்புமிக்க திட்டத்தை மக்களுக்கு அர்ப்பணித்திருக்கிறார்: முதல்வருக்கு செல்வப்பெருந்தகை பாராட்டு appeared first on Dinakaran.