×

மது அருந்தும்போது தகராறு வாலிபரை தாக்கிய 2 நண்பர்கள் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நண்பர்கள் 3 பேர் சேர்ந்து மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் நண்பனை தாக்கிய 2 பேரை, போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் மதுரை கூடல் நகரை சேர்ந்த கிருஷ்ணன் மகன் சரவணன் (23), வையாவூர் காமாட்சியம்மன் நகரை சேர்ந்த குமார் மகன் சந்தோஷ் (27), காஞ்சிபுரம் எண்ணெய்கார தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் ராகுல் (21) ஆகிய 3 பேரும் நண்பர்கள். இவர்கள், 3 பேரும் நேற்று முன்தினம் மாலை காஞ்சிபுரத்தை அடுத்த வையாவூர் பகுதியில் ஒன்றாக சேர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது, 3 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த சந்தோஷ் மற்றும் ராகுல் ஆகிய 2 பேரும் சரவணனை கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து அங்கிருந்தவர்கள் அளித்த தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விஷ்ணுகாஞ்சி போலீசார் காயமடைந்த சரவணனை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தாக்குதலில் ஈடுபட்ட சந்தோஷ் மற்றும் ராகுல் ஆகிய 2 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post மது அருந்தும்போது தகராறு வாலிபரை தாக்கிய 2 நண்பர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Krishnan Makan Saravanan ,Madurai Koodal Nagar ,Vaiyavur Kamatshyamman Nagar ,
× RELATED வீட்டுமனை பட்டா வழங்காததை கண்டித்து...