×

மீஞ்சூர் பேரூராட்சியில் ரூ.8.67 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன்கடை: எம்எல்ஏ திறந்து வைத்தார்

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சி 3வது வார்டு, கல்யாண சுந்தரம் தெருவில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.8.67 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடையினை துரை சந்திரசேகர் எம்எல்ஏ திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சிக்கு, மீஞ்சூர் பேரூராட்சி துணைத் தலைவர் அலெக்சாண்டர் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில், மீஞ்சூர் பேரூராட்சி மன்ற தலைவர் ருக்மணி மோகன்ராஜ், மீஞ்சூர் பேரூர் செயலாளர் தமிழ் உதயன், திமுக நிர்வாகிகள் மணிமாறன், ஏழுமலை, முப்புராஜ், சேகர் பாபு, கருணாகரன், அபிராமன், உதயகுமார், குரு சாலமன், தமிழரசு, விமல் ராஜ், ஸ்ரீராம் கார்த்திக், தேவராஜன், கார்த்திக், ஜோதி ஆனந்த், லட்சுமி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அன்பரசு, அத்திப்பட்டு புருஷோத்தமன், சுகுமார் எத்திராஜன், மகாலிங்கம், கருப்பையா, பாலசந்தர், ராஜ்குமார், வினோத், உதயராஜ், உதயகுமார், தமிழரசன், சேதுராஜன், மகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post மீஞ்சூர் பேரூராட்சியில் ரூ.8.67 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன்கடை: எம்எல்ஏ திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : MLA ,Meenjoor municipality ,Durai Chandrasekhar ,Assembly Constituency Development Fund ,Kalyana Sundaram Street, 3rd Ward, Meenjoor Municipality, Thiruvallur District ,Dinakaran ,
× RELATED புதிய அங்கன்வாடி கட்டிடம்: எம்எல்ஏ அடிக்கல்