- மாவட்டம்
- திருவள்ளூர்
- ஆர். ஸ்ரீநிவாச பெருமாள்
- சமாஜ்வாடி
- மதுவிலக்கு மதுவிலக்கு அமலாக்க அலகு
- திருவள்ளூர் மாவட்டம்
- மாவட்ட எஸ்.பி.
- தின மலர்
திருவள்ளூர்: மதுவிலக்கு மற்றும் பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்படும் என மாவட்ட எஸ்பி ஆர்.சீனிவாச பெருமாள் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி ஆர்.சீனிவாச பெருமாள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் மாவட்ட காவல் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில் சம்மந்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ள 99 வாகனங்களில் 81 இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 15 நான்கு சக்கர வாகனங்களை திருவள்ளூர் மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் வருகின்ற 19ம் தேதி காலை 10 மணியளவில் ஆயுதப்படை மைதானத்தின் அருகே 99 வாகனங்கள் ஏலம் விடப்பட உள்ளது.
வாகனங்களை ஏலம் கேட்க வருபவர்கள் முன் வைப்பு கட்டணத் தொகையாக இருசக்கர வாகனங்களுக்கு ரூ.1000, மூன்று சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.5 ஆயிரம் மட்டும் செலுத்த வேண்டும். அதற்கான டோக்கன் காலை 8 மணி முதல் 10 மணி வரை வழங்கப்படும். வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் ஏலம் கேட்ட தொகையுடன் இரு சக்கர வாகனத்திற்கு அரசு விற்பனை வரி 12 சதவிகிதமும், மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு 18 சதவிகிதமும் உடனடியாக செலுத்திட வேண்டும்.
வாகனத்தின் விபரம் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பீட்டு தொகை திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அலுவலக தகவல் அறிவிப்பு பலகையில் ஒட்டி வைக்கப்பட்டுள்ளது. வாகனத்தின் உரிமையாளர்கள் உரிமையாளருக்கான பதிவுச்சான்று ஆதார் கார்டு கொண்டு வரவேண்டும் மற்றும் பொது ஏலத்தில் கலந்துகொள்ள வருபவர்கள் ஆதார் கார்டு, அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டை தவறாமல் கொண்டு வரவேண்டும். ஏலத்தில் கலந்து கொண்டு வாகனம் எடுக்காதவர்களுக்கு முன்வைப்பு கட்டணத் தொகை ஏலத்தின் முடிவில் திருப்பித் தரப்படும் என எஸ்.பி இவ்வாறு கூறியுள்ளார்.
The post மதுவிலக்கு, பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்: மாவட்ட எஸ்பி தகவல் appeared first on Dinakaran.