×

மர்மமான முறையில் உயிரிழந்த குதிரை

திருவொற்றியூர்: மணலி ஆமுல்லைவாயல் சாலையில் நேற்று முன்தினம் அந்த பகுதியில் சுற்றித்திரிந்த குதிரை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதை யாரும் கவனிக்காததால் குதிரையின் உடல் அழுகி துர்நாற்றம் வீசியது. தற்போது விட்டுவிட்டு மழை பெய்வதால் குதிரையின் சடலத்தால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த கவுன்சிலர்கள் முல்லை ராஜேஷ் சேகர், ஸ்ரீதரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று, மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, பின்னர் பொக்லைன் உதவியுடன் அதே பகுதியில் பள்ளம் தோண்டி மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மூலம் குதிரையின் சடலத்தை மீட்டு அடக்கம் செய்தனர்.

The post மர்மமான முறையில் உயிரிழந்த குதிரை appeared first on Dinakaran.

Tags : Amullaivoyal road ,Manali ,
× RELATED சூறைக்காற்றுடன் கனமழை; மணலி புதுநகர் சாலையில் உடைந்து விழுந்த மின்கம்பம்