- நுடு யுக்டி
- கொல்கத்தா
- அமலாக்கத் துறை
- யுக்தி
- குனால் குப்தா
- மேற்கு
- மெட் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட்
- அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரே
- நியூ யுக்டி
- தின மலர்
கொல்கத்தா: தொழிலதிபரின் பணமோசடி வழக்கில் புது யுக்தியாக ரூ.5.2 கோடி சொத்துகளுடன் 37 குதிரைகளையும் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த தொழிலதிபரும், மெட் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளருமான குணால் குப்தா என்பவர், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளை சேர்ந்த தனது வாடிக்கையாளர்களிடம் பல கோடி ரூபாயை மோசடி செய்துள்ளார். சைபர் கிரைம் மூலம் மோசடி நடந்துள்ளதால், இவ்விவகாரம் குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிந்து அவருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தியது.
இந்நிலையில் குணால் குப்தாவுக்கு சொந்தமான சுமார் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள 37 பந்தயக் குதிரைகள் உட்பட 5.2 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. குதிரைகள் அசையும் சொத்துகள் என்பதால், அதனை ஏலம் விட அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘பணமோசடி சட்டத்தின்படி, பந்தயக் குதிரைகளை தனியார் விலங்குகள் விற்பனை மற்றும் வளர்ப்பாளர்களிடமிருந்து குணால் குப்தா வாங்கினார். அவர் செய்த குற்றத்தின் அடிப்படையில் குதிரைகளை விலை கொடுத்து வாங்கியதால், அந்த குதிரைகளை சொத்துகளாகத்தான் கணக்கிட முடியும். அதனால் அவருக்கு சொந்தமான 37 பந்தயக் குதிரைகளையும் பறிமுதல் செய்து, அவற்றை பாராமரித்து வருகிறோம்’ என்று கூறினர்.
The post ரூ.5.2 கோடி மதிப்புள்ள சொத்துகளுடன் 37 பந்தயக் குதிரைகளையும் முடக்கியது அமலாக்கத்துறை: பணமோசடி வழக்கில் புது யுக்தி appeared first on Dinakaran.