×

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு நிவாரண நிதியாக தமிழகத்திற்கு ரூ.944.80 கோடி நிதி ஒதுக்கியது ஒன்றிய அரசு

சென்னை: ஃபெஞ்சல் புயல் பாதிப்பு நிவாரண நிதியாக தமிழகத்திற்கு ரூ.944.80 கோடி ஒன்றிய அரசு நிதி ஒதுக்கியது. மாநில பேரிட நிவாரண நிதிக்கு ஒன்றிய அரசின் பங்காக ரூ. 944.80 கோடியை ஒன்றிய உள்துறை அமைச்சகம் வழங்கியது. ஒன்றிய குழு அறிக்கையின் அடிப்படையில் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து கூடுதல் தொகை விடுவிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. புயல் பாதிப்புகளை மத்திய குழுவினர் நாளை நேரில் ஆய்வு செய்ய உள்ளனர்.

The post ஃபெஞ்சல் புயல் பாதிப்பு நிவாரண நிதியாக தமிழகத்திற்கு ரூ.944.80 கோடி நிதி ஒதுக்கியது ஒன்றிய அரசு appeared first on Dinakaran.

Tags : EU Government ,Tamil Nadu ,Chennai ,Union Government ,Union Ministry of Interior ,UNION COMMITTEE ,Dinakaran ,
× RELATED டங்ஸ்டன் சுரங்க இடம் – மறு ஆய்வுக்கு பரிந்துரை