×

வேலை தேடுபவர்களை குறிவைத்து நடக்கும் மோசடி :சைபர் கிரைம் பிரிவு எச்சரிக்கை

சென்னை : தமிழ்நாடு சைபர் க்ரைம் பிரிவு, வேலை தேடுபவர்களை குறிவைத்து நடக்கும் மோசடி குறித்து பொது எச்சரிக்கை விடுத்துள்ளது. வேலை தருவதாக இணையம் மூலமாக விளம்பரம் செய்து, அதை நம்பிவரும் மக்களை, தங்களின் இடத்திற்கோ அல்லது தங்களின் நாட்டிற்கோ வரவழைத்து அம்மக்களை சைபர்கிரைம் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுத்துகிறார்.

அப்படி பாதிக்கப்பட்டவர்களை ‘சைபர் அடிமைகள்’ என்று வகைப்படுத்துகிறார்கள். சைபர் அடிமைத்தனம் அதிகரித்து வருகிறது. அங்கு தனிநபர்கள். குறிப்பாக இந்தியாவிலிருந்து, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் டேட்டா என்ட்ரி மற்றும் கால்சென்டர்கள் போன்ற வேலைகளுக்கு அங்கீகரிக்கப்படாத மனிதவள ஏஜென்சிகளால் சட்டவிரோதமாக ஆட்சேர்ப்பு செய்யப்படுகிறது.

அந்த நாட்டு சைபர் மோசடி பேர்வழிகள், இவர்களை இந்தியாவில் சைபர்குற்றங்களை நடத்தப் பயன்படுத்துகிறார்கள். அதாவது, அவர்களே போன் செய்து பேசி இந்தியாவில் சைபர்மோசடி செய்வதைவிட, இந்தியர்களின் குரல் மூலம் இந்த மோசடிகளைச் செய்வது மிகவும் எளிதாகும்.
இது மாதிரியான அங்கீகரிக்கப்படாத ஆட்சேர்ப்பு முகமைகளுக்கு எதிராக பல புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சமீபத்தில், புலம் பெயர்ந்தோர் பாதுகாப்பாளர் (Protector of Emigrants . PoE), சென்னை, இவ்வாறான அங்கீகரிக்கப்படாத ஆட்சேர்ப்பு முகவர்களுடன் தொடர்புடைய சமூக ஊடக இணைப்புகள், இணையதளங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய 128 URLகளின் விவரங்களைப் பகிர்ந்துள்ளார். சைபர்கிரைம் பிரிவு, தமிழ்நாடு அதன் மீது நடவடிக்கை எடுத்து, இந்த URLகளை வெற்றிகரமாக முடக்கியுள்ளது.

மோசடி எவ்வாறு செயல்படுகிறது

*உரிமம் பெறாத ஆட்சேர்ப்பாளர்கள் வெளிநாடுகளில் அதிக ஊதியம் பெறும் வேலைகள் பற்றியகவர்ச்சிகரமான வாக்குறுதிகளுடன் தனிநபர்களை ஈர்க்கிறார்கள், பெரும்பாலும் இந்த வாய்ப்புகளை உண்மையான மற்றும் தங்கள் வாழ்க்கையை மாற்றுவதற்கான வாய்ப்பாக சித்தரிக்கின்றனர்.

*இந்த மோசடியான ஆட்சேர்ப்பாளர்கள் சமூக ஊடகதளங்கள். போலி வலைத்தளங்கள் மற்றும் பிற அங்கீகரிக்கப்படாத சேனல்கள் மூலம் மக்களை தொடர்பு கொள்கின்றனர்.

*இந்த போலியான ஆட்செர்ப்பு முகமைகள் தங்களை உண்மையானவர்கள் போலவே காட்டிக்கொள்வதால் உண்மையான மற்றும் சட்டவிரோத ஏஜென்சிகளை வேறுபடுத்துவது கடினம்.

*இவர்கள் மூலமாக வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் தங்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட வேலைகள் இல்லை அல்லது மோசமான வேலைகளில் தங்களை பணியமர்த்துவதை தாமதமாகவே உணர்கின்றனர். இவர்களை பெரும்பாலும் மற்றவர்களை ஏமாற்றுவதுஅல்லது சட்டப்பூர்வ உதவி உட்படுத்தப்படுகிறார்கள். இல்லாமல் கடுமையான பணிச்சூழலுக்கு

*பாதிக்கப்பட்டவர்களை மேலும் சிக்க வைக்க, இந்த போலியான ஆட்சேர்ப்பு முகமைகள் இவர்களின் பாஸ்போர்ட் மற்றும் பிற அடையாள ஆவணங்களை கைப்பற்றுகிறார்கள். இதனால் அவர்களால் அந்த நாட்டைவிட்டு வெளியேறவும் முடியாமல், தங்களின் மோசமான பணிசூழலில் இருந்தும் விடுபடமுடியாமல் அவர்களை கட்டாய உழைப்பின் சுழற்சியில் சிக்கவைக்கிறது. இதிலிருந்து தப்பிப்பது அல்லது உதவி தேடுவது மிகவும் சவாலாக உள்ளது.

பொது மக்களுக்கான அறிவுரை:

1. சட்டவிரோதமாக ஆட்சேர்ப்பு செய்பவர்களைத் தவிர்க்கவும் முறையான ஆவணங்கள் இல்லாமல் அல்லது ஏதேனும் சமூக ஊடகத்தின் விளம்பரங்களின் மூலம் வேலைகளை உறுதியளிக்கும் ஏஜென்சிகளை ஒரு போதும் நம்பாதீர்கள்.
2. அங்கீகாரத்தைச் சரிபார்க்கவும்: வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் புலம் பெயர்ந்தோர் பாதுகாப்பாளரால் (PoE) அங்கீகரிக்கப்பட்ட ஆட்சேர்ப்பு நிறுவனங்களை மட்டும் அணுகவும்.
3. ஆட்செர்ப்பு முகமைகளைச் சரிபார்க்கவும்: வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் (MEA) eMigrate போர்ட்டலில் (https://www.emigrate.gov.in/) பதிவு செய்யப்பட்ட அனைத்து ஆட்சேர்ப்பு முகவர்களின் பட்டியல் உள்ளது. இதன் மூலம் ஆட்செர்ப்பு முகமைகளைச் சரிபார்க்கலாம்.
4. குடியேற்றச் சட்டம், 1983 இன்படி வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் பதிவு செய்யப்பட்ட சான்றிதழ் இல்லாமல் ஆட்சேர்ப்பு முகவராகச் செயல்பட எந்த நபருக்கும் அதிகாரம் இல்லை.
5. பதிவுச்சான்றிதழைக் கேளுங்கள் ஆட்சேர்ப்பு முகவர்களிடம் தங்கள் பதிவுச்சான்றிதழை உங்களிடம் காண்பிக்கும்படி கேளுங்கள். அந்த சான்றிதழில் இருக்கும் உரிம எண்ணைச் சரிபார்க்கவும் மேலே குறிப்பிட்டுள்ள போரட்டலில் சரிபார்க்கவும் – பதிவு செய்யப்பட்ட ஆட்சேர்ப்பு முகவர்கள் தங்கள் அலுவலகங்களிலும் விளம்பரங்களிலும் தங்கள் உரிம எண்ணை எப்போதும் காட்டுகிறார்கள்.
6. விழிப்புடன் இருங்கள்: சந்தேகத்திற்கிடமான ஆட்சேர்ப்பு செய்பவர்களை அடையாளம் கண்டால், உடனடி நடவடிக்கைக்காக, emigrate போர்ட்டலில் அல்லது காவல்துறையிடம் புகாரளிக்கவும்.

புகார் அளிக்க

நீங்கள் இதுபோன்ற மோசடிகளுக்கு ஆளாகியிருந்தால் அல்லது சந்தேகத்திற்கிடமான செயலைச் சந்தித்திருந்தால், சைபர்கிரைம் கட்டணமில்லா தொலைபேசி எண் 1930ஐ அழைத்து சம்பவத்தைப் புகாரளிக்கவும் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகாரைப்பதிவு செய்யவும்.

The post வேலை தேடுபவர்களை குறிவைத்து நடக்கும் மோசடி :சைபர் கிரைம் பிரிவு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,Cyber Crime Unit ,Dinakaran ,
× RELATED வார்டு மறுவரையறை முடிந்த பிறகே...