×

கலிபோர்னியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: வாபஸ் பெறப்பட்ட சுனாமி எச்சரிக்கை

கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதன் காரணமாக கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருவதாக அந்த மாகாணத்தின் கவர்னர் தகவல் தெரிவித்தார்.அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் சான் பிரான்ஸிஸ்கோ விரிகுடா பகுதியில் வியாழன் அன்று அமெரிக்க நேரப்படி காலை 10.44க்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவாகி இருந்தது. இதனை அடுத்து மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.

மேலும் சான் பிரான்ஸிஸ்கோ மிருக கட்சி சாலையில் பார்வையாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டதாகவும் அங்கிருக்கும் விலங்குகள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. நிலநடுக்கத்தை தொடர்ந்து அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் 2 ஆம் நிலை சுனாமி எச்சரிக்கையை விடுத்தது. அமெரிக்க நேரப்படி காலை 11.10க்கு வடக்கு கலிபோர்னியா, தெற்கு ஹரிகார்டில் உள்ள கடற்கரையை கடந்து 12.10க்கு சான் பிரான்ஸிஸ்கோவுக்கு சுனாமி வர வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. கடற்கரை பகுதிக்கு அருகில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு மாறவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து அங்குள்ள மக்கள் பதட்டமான மனநிலையில் இருந்தனர். இதனை அடுத்து கடல் கொந்தளிப்பு இல்லாமல் காணப்பட்டதால் விதிக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது.

 

The post கலிபோர்னியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: வாபஸ் பெறப்பட்ட சுனாமி எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Powerful earthquake in ,California ,US ,governor of ,San ,California, USA ,Dinakaran ,
× RELATED அமெரிக்க காப்புரிமையை மீறுவதாக ஓபன்...