×

மேற்கூரை இடிந்து பெண் படுகாயம்

பெரம்பூர்: கொடுங்கையூர் முத்தமிழ் நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் சல்மா (43) இவரது கணவர் இஸ்மாயில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மகளை திருமணம் செய்து கொடுத்துவிட்டு சல்மா தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் சாப்பிட்டுவிட்டு சல்மா வீட்டில் உறங்கிக்கொண்டு இருந்தார். இரவு 11 மணியளவில் வீட்டின் மேற்கூரை இடிந்து சல்மா மீது விழுந்தது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் சல்மாவை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக வீட்டின் மேற்கூரை சிமென்ட் பூச்சு ஈரமாக இருந்ததாகவும், அதனால் மேற்கூரை இடிந்து விழுந்ததாகவும் தெரிகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மேற்கூரை இடிந்து பெண் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Perambur ,Salma ,First Street ,Kodunkaiyur Muthamil Nagar ,Ismail ,
× RELATED உணவு டெலிவரி நிறுவனங்களின் சலுகை...