×

பெரம்பூர் 71வது வார்டில் குப்பை குவியலால் சுகாதார சீர்கேடு

பெரம்பூர்: பெரம்பூர் 71வது வார்டுக்கு உட்பட்ட குருமூர்த்தி கார்டன் தெரு, கண்ணபிரான் கோயில் தெரு, பள்ளி சாலை போன்ற பகுதிகளில் கடந்த 4 நாட்களாக சரிவர குப்பை அகற்றப்படாததால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக குருமூர்த்தி கார்டன் தெருவில் குப்பை குவிந்து காணப்படுகிறது. இதனால், கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது. அந்த பகுதியில் ஐயப்பன் கோயில் உள்ளதால் தினமும் ஏராளமான பக்தர்கள் காலை மற்றும் மாலை என இருவேளையும் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். குப்பை சரிவர அகற்றப்படாததால் கடும் துர்நாற்றம் வீசுவதால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் முகம் சுளித்தபடி வந்து செல்கின்றனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள், பெரம்பூர் 71வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

The post பெரம்பூர் 71வது வார்டில் குப்பை குவியலால் சுகாதார சீர்கேடு appeared first on Dinakaran.

Tags : Perambur ,71st Ward ,Kurumurthy Garden Street ,Kannapiran Temple Street ,School Road ,Gurumurthy Garden Street ,Perambur 71st Ward ,Dinakaran ,
× RELATED உணவு டெலிவரி நிறுவனங்களின் சலுகை...