- ராகுல் காந்தி
- காங்கிரஸ்
- சென்னை
- புதுச்சேரி
- விழுப்புரம்
- வங்காள விரிகுடா
- திருவண்ணாமலை
- பென்ஜால்
- தின மலர்
சென்னை: வங்கக்கடலில் உருவான ‘பெஞ்சல்’ புயல் காரணமாக புதுச்சேரியிலும், விழுப்புரம் மாவட்டத்திலும் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. திருவண்ணாமலையில் ஏற்பட்ட மலைச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பெஞ்சல் புயல் பாதிப்பால் பல்வேறு பாதிப்புகளை தமிழகம் சந்தித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் நிவாரண உதவிகளை மேற்கொள்ள காங்கிரஸ் தொண்டர்களுக்கு நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக ராகுல்காந்தி தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: பெஞ்சல் புயலால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்பைக் கண்டு மனமுடைந்தேன். புயல் பாதிப்பால் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். தங்களின் உடைமைகளை இழந்தவர்களுக்கு ஆறுதல்களை தெரிவித்து கொள்கிறேன். மாநிலத்தில் உள்ள அனைத்து காங்கிரஸ் தொண்டர்களும், முடிந்தவரை நிவாரணப் பணிகளில் நிர்வாகத்திற்கு உதவ முன்வருமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post புயலால் பாதித்தோருக்கு நிவாரண உதவிகளை மேற்கொள்ளுங்கள்: காங்கிரசாருக்கு ராகுல் காந்தி வேண்டுகோள் appeared first on Dinakaran.