- பெஞ்சல் புயல்
- விழுப்புரம் மாவட்டம்
- தம்பிராமம் கழகம்
- தாம்பரம்
- பெஞ்சல் புயல்
- செங்கல்பட்டு
- விழுப்புரம்
- கடலூர்
- கள்ளக்குறிச்சி
- திருவண்ணாமலை
- கிருஷ்ணகிரி
- தமிழ்நாடு அரசு
- தின மலர்
தாம்பரம்: பெஞ்சல் புயல், கனமழையால் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. மேற்கண்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கும் பணிகளில் தமிழக அரசு முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியில் புயல், மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தாம்பரம் மாநகராட்சி சார்பில் நேற்று வேன் மூலம் உணவு அனுப்பப்பட்டது. மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் கோ.காமராஜ், மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் ஆகியோர், கொடியசைத்து உணவுகளை அனுப்பி வைத்தனர்.
பின்னர் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் நிருபர்களிடம் கூறியதாவது: விழுப்புரம் விக்கிரவாண்டி பேரூராட்சியில் புயல், மழையால் பாதித்த 5000 பேருக்கு, தாம்பரம் மாநகராட்சியின் மூலம் அம்மா உணவகங்களில் இருந்து லெமன் சாதம் தயார் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. நாளை முதல் மூன்று வேளையும் காலை, மதியம், மாலை மற்றும் நாளை மறுநாள் காலை, மதியம், மாலை மூன்று வேளையும் மீண்டும் 5000 நபர்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சில நிவாரண பொருட்கள் எல்லாம் கேட்டு இருக்கிறார்கள். அதையும் தாம்பரம் மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. மாநகராட்சியில் இருந்து மீட்பு பணிகளுக்கு 100 பேர் கேட்டு இருக்கிறார்கள். முதற்கட்டமாக 50 பணியாளர்களை அனுப்பி இருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயலால் பாதித்த 5 ஆயிரம் பேருக்கு உணவு: தாம்பரம் மாநகராட்சி வழங்கியது appeared first on Dinakaran.