×

புயல் நிவாரண பொருட்கள் விழுப்புரத்துக்கு அனுப்பி வைப்பு

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் இருந்து, புயல் நிவாரண பொருட்கள் விழுப்புரம் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இதேபோல், மாமல்லபுரம் பேரூராட்சி பகுதியில் அரிசி, பருப்பு, கோதுமை பாக்கெட், சமையல் எண்ணெய், பிஸ்கட் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் என சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் வியாபாரிகள், லயன்ஸ் கிளப், ஓட்டல் நிர்வாகங்கள் ஒன்றிணைந்து பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த நிவாரண பொருட்கள் அனைத்தும், மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், காஞ்சிபுரம் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் லதா, பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ் ஆகியோர் மேற்பார்வையில், நேற்று மதியம் மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் மூலம் ஒரு வாகனத்தில் ஏற்றி, ‘பெஞ்சல்’ புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

The post புயல் நிவாரண பொருட்கள் விழுப்புரத்துக்கு அனுப்பி வைப்பு appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Mamallapuram ,Villupuram district ,Benjal storm ,
× RELATED விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு