×

தமிழக அரசு கோரும் நிவாரண நிதியை ஒன்றிய அரசு உடனே வழங்க ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: வங்கக்கடலில் உருவாகி கரையைக் கடந்த பெஞ்சல் புயலால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் வரலாறு காணாத அளவில் மழை பெய்து வருகிறது. முன்னறிவிப்பும் இல்லாமல் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் நீரை திறந்து விட்டு மக்களின் இன்னல்களை பல மடங்கு பெருக்கியிருக்கிறது. நிலைமையை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும்.

சாத்தனூர் அணை முன்னறிவிப்பின்றி திறந்து விடப்பட்டதற்கு காரணம் என்ன, இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யார் என்பதைக் கண்டறிய உயர்நிலை விசாரணைக்கு தமிழக அரசு உடனடியாக ஆணையிட வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் அனைத்துக் குடும்பங்களுக்கும் தலா ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டும். மழை மற்றும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக தமிழக அரசு கோரும் நிவாரண நிதியை ஒன்றிய அரசு உடனே வழங்க வேண்டும்.

The post தமிழக அரசு கோரும் நிவாரண நிதியை ஒன்றிய அரசு உடனே வழங்க ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Ramadoss ,Union Government ,Tamil Nadu Government ,CHENNAI ,BAMA ,Benjal ,Bay of Bengal ,Tamil Nadu ,Ramadas ,Chatanur Dam ,Tiruvannamalai district ,Tenpenna River ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள...