×

பெயிண்டர்கள் வாழ்வாதரத்தை காக்க கோரி கலெக்டரிடம் மனு

தஞ்சாவூர், டிச. 3: தஞ்சாவூரில் பெய்த தொடர் மழையால் வேலை இழந்துள்ள, தங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற அரசு உதவிட வேண்டும் என பெயிண்டர், ஓவியர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். தமிழ்நாடு அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் நலச் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் ராக்கின்ராஜ் தலைமையில் நிர்வாகிகள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: nதமிழ்நாடு அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் நல சங்கம் தொடங்கி நடத்தி வருகிறோம். தற்போது தொடர் மழை காரணமாக வேலை இல்லாமல் வாழ்வாதாரம் இழந்து, தவித்து வருகிறோம். தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 3,500க்கும் மேற்பட்ட பெயிண்டர்கள் உள்ளனர். எனவே, வேலைவாய்ப்பின்றி தவிக்கும் எங்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

The post பெயிண்டர்கள் வாழ்வாதரத்தை காக்க கோரி கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Tamil Nadu ,All Painters and Painters Welfare Association ,Dinakaran ,
× RELATED வரத்து குறைவால் தஞ்சையில் பீன்ஸ், அவரை விலை கடும் உயர்வு