×

வலங்கைமானில் சத்துணவு சமையலர், உதவியாளர்களுக்கு பயிற்சி

வலங்கைமான், டிச.3: வலங்கைமானில் சத்துணவு சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கு ஒருநாள் பயிற்சி அளிக்கப்பட்டது. வலங்கைமான் வட்டாரத்தில் சத்துணவுதிட்டத்தின் கீழ் பணி புரியும் சமையலர் மற்றும் சமையல்உதவியாளர்களுக்கு ஒருநாள் பயிற்சி ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் பயிற்சி நடைபெற்றது. ஒன்றிய குழு தலைவர் சங்கர் தலைமை வகித்து துவக்கி வைத்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) கதிரவன் வரவேற்று பேசினார். வட்டார வளர்ச்சி அலுவலர் முரளி, வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேசிய மதிய உணவு திட்டம், மேலாண்மை கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு 2024-2025 திட்டத்தின் கீழ் உணவு பாதுகாப்பு அலுவலர், மருத்துவ அலுவலர் ஊட்டச்சத்து நிபுணர் யோகா பயிற்சியாளர் மற்றும் மாவட்ட சமூக நல அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டு, உணவு தயாரித்தல் மற்றும் சுகாதாரம் பராமரித்தல் தொடர்பாக பல்வேறு தகவல்களை தெரிவித்தனர். உதவியாளர் மாரியப்பன் நன்றி கூறினார்.

The post வலங்கைமானில் சத்துணவு சமையலர், உதவியாளர்களுக்கு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Valangaiman ,Satthunavutham ,Panchayat Union ,Union Committee ,Sathunavu Samyaal ,
× RELATED வலங்கைமானில் குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீர் அகற்ற கோரிக்கை