×

நல்லூர் ஊராட்சியில் சமூக தணிக்கை கிராமசபை கூட்டம்

வலங்கைமான், டிச.3: திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அடுத்த நல்லூர் ஊராட்சியில் 2023-24 ஆம் ஆண்டுக்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடர்பான சமூக தணிக்கை கிராம சபை கூட்டம் நடைபெற்றது.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள நல்லூர் ஊராட்சியில் கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் 2023-2024 ஆண்டுக்கான தேசிய ஊரக வேலை உறுதி திட்ட சமூக தணிக்கை மற்றும் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம் 2016-2017 முதல் 2023- 2024 முடிய சமூக தணிக்கை கடந்த 25ம் தேதி முதல் 29ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற்றது. கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கலையரசி ரங்கராஜன், துணைத் தலைவர் விமலா ஊராட்சி ஒன்றிய பணிமேற்பா ர்வையாளர் ராதிகா, வட்டார வள அலுவலர் மஞ்சனிக்கூத்தர், ராணி,ஊராட்சி செயலாளர் சிவசங்கரன் மற்றும் ஊராட்சி மன்ற வார்டு உறு ப்பினர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

The post நல்லூர் ஊராட்சியில் சமூக தணிக்கை கிராமசபை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Social Audit Gram Sabha Meeting ,Nallur Panchayat ,Valangaiman ,Tiruvarur district ,Nallur ,audit village ,Dinakaran ,
× RELATED வலங்கைமானில் குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீர் அகற்ற கோரிக்கை