×

வீட்டில் நகை, பணம் மாயம்

பெரம்பூர்: வியாசர்பாடி பி.வி.காலனி அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் முகமது அலி (50). ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி சர்ஜிதா (44). இவர் சென்னை மாநகராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். கடந்த 28ம் தேதி சர்ஜிதா தனது வீட்டில் உள்ள பீரோவில் இருந்து பணத்தை எடுத்துள்ளார். அதன் பிறகு பீரோவை திறக்கவில்லை. இந்நிலையில் கடந்த 30ம் தேதி இரவு மீண்டும் பீரோவை திறந்து பார்த்தபோது அதில் இருந்த ஒரு சவரன் கம்மல் மற்றும் ரூ.4000 உள்ளிட்டவை காணாமல் போனது தெரிந்தது. இதுகுறித்து, எம்கேபி நகர் காவல் நிலையத்தில் சர்ஜிதா புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வீட்டில் நகை, பணம் மாயம் appeared first on Dinakaran.

Tags :
× RELATED கடற்கரையில் பெண்களிடம் அத்துமீறிய 3 பேர் கைது