×

6 நாட்களுக்கு பிறகு விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்றனர்

தூத்துக்குடி, டிச.3: வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையால் மன்னார் வளைகுடா மற்றும் தமிழக கடல் பகுதிகளில் மணிக்கு 75 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் கடந்த நவ.26ம் தேதி முதல் கடலுக்குச் செல்ல வேண்டாமென தூத்துக்குடி மீன்வளத்துறை உத்தரவிட்டது. இதன்படி அவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் தங்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர். மேலும் அவர்கள் கரைவலை மீன்பிடிப்பு பணியில் ஈடுபட்டனர்.

தற்போது சூறாவளி காற்று எச்சரிக்கை இல்லாததால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத்துறை அனுமதித்துள்ளது. அதன்படி, மீனவர்கள் நேற்று (2ம் தேதி) அதிகாலை முதல் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். சுழற்சி முறையில் 102 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றுள்னர். 6 நாட்களுக்கு பின்ன கடலுக்குச் செல்வதால் அதிக மீன்கள் கிடைக்கும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

The post 6 நாட்களுக்கு பிறகு விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்றனர் appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Bay of Bengal ,Gulf of Mannar ,Tamil Nadu ,Chennai Meteorological Department ,Tuticorin ,Dinakaran ,
× RELATED வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது