×

களக்காடு அருகே நலத்திட்ட உதவிகள் வழங்கல்

களக்காடு,டிச.3: களக்காடு அருகே உள்ள ஊச்சிகுளத்தில், தெற்கு ஒன்றிய திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா நடந்தது. தெற்கு ஒன்றிய செயலாளரும், நகராட்சி துணை தலைவருமான பி.சி.ராஜன் தலைமை வகித்து, நலத்திட்ட உதவிகள் வழங்கினார். முன்னதாக புறாக்கள் பறக்கவிடப்பட்டது. இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் சித்திக், நகராட்சி கவுன்சிலர் ஜின்னா, திமுக மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முகைதீன், நிர்வாகிகள் கோபால் பாண்டியன், திருமலைநம்பி, ஜான்பால், அருணாசலம், ஜெயகுமார், கர்ணன், முத்துபாண்டி, முருகேசன், ஆப்ரகாம், கனியப்பா, காட்வின், தாஸ், கல்யாணசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post களக்காடு அருகே நலத்திட்ட உதவிகள் வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Kalakadu ,Chief Minister ,Udayanidhi Stalin ,South Union DMK ,Uchikulam ,Southern Union ,Municipal Vice President ,BC Rajan ,Dinakaran ,
× RELATED சென்னை ராயப்பேட்டையில் ரேஷன் கடையை...