×

மாமல்லபுரத்தில் பெஞ்சல் புயல் காரணமாக கிருஷ்ணா மண்டபத்தில் படிந்த தூசிகள் அகற்றும் பணி தீவிரம்

 

மாமல்லபுரம், டிச.2: மாமல்லபுரத்தை கடந்த 7ம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த பல்லவ மன்னர்கள் கடற்கரை கோயில், அர்ஜூனன் தபசு, வெண்ணெய் உருண்டை கல் உள்ளிட்ட பல்வேறு சிற்பங்களை பாறைகளை குடைந்து அழகுர செதுக்கினர். இதனை, கண்டு ரசிக்க உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணிகள் தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இதில், மேற்கு ராஜவீதி பகுதியில் கிருஷ்ணா மண்டபம், அர்ஜூனன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை ஆகிய புராதன சின்னங்கள் அமைந்துள்ளது.

மேலும், பெஞ்சல் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலாத் தலம் மூடப்பட்டது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு பெஞ்சல் புயல் புதுச்சேரிக்கு அருகே கரையை கடந்தது. இதையடுத்து, மாமல்லபுரத்தில் 60 கிமீ வேகத்தில் பாலத்த சூறாவளி காற்று வீசியது. அப்போது, புராதன சின்னங்கள் மீது தூசி படிந்து காணப்பட்டது. இந்த நிலையில், மேற்கு ராஜ வீதியில் உள்ள கிருஷ்ணா மண்டபத்தின் உள்பகுதியில் படிந்துள்ள தூசிகளை அகற்றும் பணியில் தொல்லியல் துறை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

The post மாமல்லபுரத்தில் பெஞ்சல் புயல் காரணமாக கிருஷ்ணா மண்டபத்தில் படிந்த தூசிகள் அகற்றும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,Krishna ,Mandapam ,Benjal ,Pallava ,
× RELATED மாமல்லபுரம் மரகத பூங்காவில் ஒளிரும்...