×

இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு 100 சதவீத வரி: டிரம்ப் திடீர் எச்சரிக்கை

வாஷிங்டன்: பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் அடங்கிய ‘பிரிக்ஸ்’ அமைப்பு அமெரிக்கா டாலருக்கு மாற்றாக சொந்தமாக பிரிக்ஸ் நாணயத்தை உருவாக்க முயற்சி செய்கின்றன. இது குறித்து அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டிரம்ப் தனது எக்ஸ் தள பதிவில், பிரிக்ஸ் அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகள் அமெரிக்க டாலருக்குப் பதிலாக வேறு எந்த நாணயத்தையும் உருவாக்க முயற்சி செய்தால், அவர்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும். எந்த நாடும் அமெரிக்காவின் டாலரை மாற்ற முடியாது. இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.

The post இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு 100 சதவீத வரி: டிரம்ப் திடீர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : BRICS ,India ,Trump ,Washington ,Brazil ,Russia ,China ,South ,Africa ,US ,Dinakaran ,
× RELATED பிரிக்ஸ் கரன்சிக்கு டொனால்ட் டிரம்ப்...